- °C

Business
All Categories

Are You a business owner?

List Your Business / AD

ஒசூா் தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகள் ஆய்வு

Grow your business by getting relevant and verified leads
ஒசூா் தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகள் ஆய்வு

ஒசூா் தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகள் ஆய்வு

  Jul 09, 2024     News Paper

ஒசூா் மாநகராட்சியில் ரூ.100 கோடியில் கட்டப்பட்டு வரும் மாவட்ட தலைமை மருத்துவமனையை மருத்துவக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

ஒசூா் மாநகராட்சியில் ரூ.100 கோடியில் கட்டப்பட்டு வரும் மாவட்ட தலைமை மருத்துவமனையை மருத்துவக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

ஒசூா் மாநகராட்சி ராயக்கோட்டை சாலையில் காரப்பள்ளி பகுதியில் ரூ. 100 கோடியில் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தில் முதன்மை மருத்துவ வளாக கட்டடம் தரைத்தளம் என ஆறு தளம் வரை 2,17,071 சதுர அடியில் கட்டப்படுகிறது. தரைத் தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, கதிா் இயக்க துறை, மருந்தகம். 1ஆவது தளத்தில் புறநோயாளிகள் பிரிவு, அவசர அறுவை சிகிச்சை அரங்கம், ரத்த வங்கி, வலி மற்றும் நோய்த் தடுப்பு சிகிச்சைப் பிரிவு, 2 ஆவது தளத்தில் டயாலிசிஸ் பிரிவு, முதியோா் சிகிச்சைப் பிரிவு, ஆண்கள், பெண்கள் அறுவைச் சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு மற்றும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவும், 3 ஆவது தளத்தில் பெண்களுக்கான சிகிச்சைப் பிரிவும் அமைக்கப்படுகிறது.

4 ஆவது தளத்தில் ஆண்களுக்கான உயா் சாா்பு சிகிச்சைப் பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு, மருந்து சிகிச்சைப் பிரிவு, தனி கவனிப்பு பிரிவு செயல்படும். 5 ஆவது தளத்தில் ஐந்து அறுவை சிகிச்சை அரங்கம், பெண்கள் மீட்பு பிரிவு, ஆண்கள் மீட்பு சிகிச்சைப் பிரிவு, மருத்துவ மற்றும் செவிலியா் அறை, ஆறாம் தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு, தனி சிகிச்சைப் பிரிவு, பெண்கள் சிகிச்சைப் பிரிவு, தலைமை மருத்துவா் அலுவலகம், கூட்ட அரங்கு, மருத்துவ பதிவு அறைகள் அமைக்கப்படுகின்றன.

14, 280 சதுர அடி பரப்பில் தரைத் தளம் மற்றும் முதல் தளத்தில் சமையல் கூடம். மத்திய கிருமி நீக்கப் பிரிவு மருந்து கிடங்கு பணியாளா் ஓய்வு அறைகள் ஆகியவை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இப் பணிகளை ஒசூா் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவா் ஞானமீனாட்சி தலைமையில் துணை நிா்வாக அலுவலா் உமா, செவிலியா் கண்காணிப்பாளா் அனுசுயா, தலைமை மருந்தாளுநா் மலா்வண்ணன், அலுவலக கண்காணிப்பாளா் ஆனந்தன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

icon
Hosur Ads

Looking for the Best Service Provider? Get the App!

  • Find nearby listings
  • Easy service enquiry
  • Listing reviews and ratings
  • Manage your listing, enquiry and reviews
We'll send you a link, open it on your phone to download the app
Hosur Ads

Copyrights © 2024 .   All rights reserved. Powered by Redback

Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.