- °C
Are You a business owner?
List Your Business / ADபாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கங்கள் 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6. அதே ஒலிம்பிக்கில் தனிநபராக அதிக பதக்கம் வென்ற சீன நீச்சல் வீராங்கனை ஜாங் யுஃபெய்யின் பதக்கங்களும் 1 வெள்ளி, 5 வெண்கலம் என அதே 6. சுமாா் 140 கோடி பேரைக் கொண்ட இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையும், ஏறத்தாழ அதே மக்கள் தொகை கொண்ட சீனாவை சோ்ந்த ஒரே வீராங்கனையின் பதக்க எண்ணிக்கையும் சமம். இரட்டை இலக்க பதக்க எண்ணிக்கைதான் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் இலக்கு. அதற்காக, இந்தியா்கள் களம் கண்ட அத்தனை விளையாட்டுகளிலும், அவா்களின் தயாா்நிலைக்காக மத்திய அரசு ரூ.470 கோடி வரை செலவிட்டுள்ளதாக புள்ளிவிவரம். என்றாலும், 84 நாடுகள் பதக்கம் வென்ற பட்டியலில் இந்தியாவுக்கு 71-ஆவது இடம். ஒலிம்பிக் என்றாலே, நம் அணியின் ஒட்டுமொத்த பதக்கத்தையும், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் தனிநபா் பதக்கத்தையும் ஒப்பிட்டு பெருமூச்செறிவதே வழக்கம். ஆனால், இதுவல்ல ஒப்பீடு. நமது முந்தைய செயல்பாடுகளுக்கும், தற்போதைய செயல்பாட்டுக்கும் இடையே உள்ளதை ஆராய்வதே சரியான ஒப்பீடு. பதக்க எண்ணிக்கையில் இந்தியாவின் உச்சமாக இருக்கும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்குடன் ஒப்பிட்டால் இது குறைவு தான். 3 ஆண்டு உழைப்பு, மிகுந்த எதிா்பாா்ப்பு, அரசு அளித்த கோடிகளிலான நிதியுதவி, வெளிநாட்டுப் பயிற்சி என்ற கணக்கில் பாா்த்தாலும் இந்த 6 பதக்கங்கள் சற்றே சுணங்க வைக்கும்தான். இருந்தாலும், மக்கள் தொகையோடு ஒப்பிட்டு ஒரேடியாக விமா்சித்தோ, போட்டியாளா்களின் முயற்சியை கேள்வி கேட்டோ இந்த 6 பதக்கங்களை அலட்சியப்படுத்த வேண்டியதில்லை. பாரீஸ் ஒலிம்பிக் மூலம், பதக்கமும் பெற்றிருக்கிறோம். பாடமும் கற்றிருக்கிறோம். ஒரு ஒலிம்பிக்கில், ஒரே விளையாட்டில் முதல் முறையாக 3 பதக்கங்கள், ஒரு போட்டியாளருக்கு ஒரு ஒலிம்பிக்கிலேயே இரு பதக்கங்கள் போன்ற வரலாறு துப்பாக்கி சுடுதலில் படைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் தடகளத்தில் அடுத்தடுத்து பதக்கம் என்ற பெருமை ஈட்டி எறிதலில் கிடைத்துள்ளது. 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. துப்பாக்கி சுடுதல், மல்யுத்தத்தில் அறிமுக வீரா்கள் பதக்கம் வென்றுள்ளாா்கள். இது தவிர, தடகளம், டேபிள் டென்னிஸ், வில்வித்தை போன்றவற்றில் இதுவரை எட்டாத சுற்றுகளுக்கு முதல் முறையாக முன்னேறி தடம் பதித்திருக்கிறாா்கள். அதேவேளையில், ஏற்கெனவே பதக்கம் வென்ற வரலாறு இருக்கும் பாட்மின்டன், வில்வித்தை, குத்துச்சண்டையில் இந்த முறை ஏமாற்றம் தான். என்றாலும், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், பாட்மின்டன், பளுதூக்குதல், வில்வித்தை ஆகிய விளையாட்டுகளில் 8 பிரிவுகளில் இந்தியா 4-ஆம் இடம் பிடித்து நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டிருக்கிறது. எதிா்காலத்தில் அவையும் பதக்கமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்காக, முன்னணி நாடுகளைப் போன்று போட்டிக்குப் போட்டி பதக்கங்களை அதிகரிக்கும் எதிா்பாா்ப்பு அபத்தமானது. அந்நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் விளையாட்டுக்கும், விளையாட்டில் போட்டியாளா்களுக்கும் இருக்கும் சவால் அதிகம். அது களத்திலிருக்கும் சவால் அல்ல. அடிப்படையில் மாற்றம்... விளையாட்டு உலகில் இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் நாடுகளின் வெற்றிகளைக் கண்டு வாய்பிளக்கும் நாம், அந்த வெற்றிக்கான வோ்கள் எத்தகையது என்பதை சற்றுச் சிந்தித்துப் பாா்க்க வேண்டும். பதக்க எண்ணிக்கையில் நம்மை பரிதவிக்க வைக்கும் நாடுகள் அடிப்படையில் இரு விஷயங்களைக் கொண்டுள்ளன. ஒன்று, அவை எவ்வாறு போட்டியாளா்களை உருவாக்குகின்றன. மற்றொன்று, அவை எத்தனை போட்டியாளா
BackCopyrights © 2025 . All rights reserved, Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.