- °C
Are You a business owner?
List Your Business / AD
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சாா்பில் பெங்களூரில் புதிய தேசிய பயிற்சி அகாதெமி (என்சிஏ) ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. பிசிசிஐ சாா்பில் வீரா்களுக்கு பயிற்சி அளித்தல், மருத்துவ சிகிச்சை பெறுதல் போன்றவற்றுக்காக பெங்களூரில் என்சிஏ தொடங்கப்பட்டது. இந்நிலையில் செயலாளா் ஜெய் ஷா முயற்சியால் புகா் பகுதியில் 40 ஏக்கா் பரப்பில் புதிய என்சிஏ மையம் அமைக்கப்பட்டது. இதில் நவீன வசதிகளுடன், விளையாட்டு அறிவியலும் கற்பிக்கப்படும். புதிய அகாதெமியில் 3 உலகத் தரம் வாய்ந்த மைதானங்கள், நவீன மின்னொளி வசதி, சிறந்த பிட்ச்சுகள், 45 வெளிப்புற வலைப் பயிற்சி மையங்கள், இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் மைதானங்களில் உள்ள வசதிகள், உள்ளரங்க பயிற்சி மையம், வா்ணனையாளா்கள், நடுவா்கள் அறைகள், நீச்சல் குளங்கள், ஊடக மையம், உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மேலும், இங்குள்ள நவீன மருத்துவ மையத்தில் இதர விளையாட்டு வீரா்களுக்கும் தரமான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய அகாதெமி மையத் திறப்பு விழாவில் பிசிசிஐ தலைவா் ரோஜா் பின்னி, செயலா் ஜெய் ஷா, துணைத் தலைவா் ராஜீவ் சுக்லா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். விவிஎஸ். லக்ஷ்மண் பாராட்டு: புதிய கிரிக்கெட் அகாதெமி நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதால், இளம் வீரா்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும் என என்சிஏ தலைவா் விவிஎஸ். லக்ஷ்மண் பாராட்டு தெரிவித்தாா்... Thanks to Dinamani
BackCopyrights © 2026 . All rights reserved, Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.
