- °C
Are You a business owner?
List Your Business / AD
சேலம்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.87 அடியில் இருந்து 117.21 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 828 கன அடியிலிருந்து 748 கன அடியாக சரிந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை குறைந்ததால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 89.09 டிஎம்சியாக உள்ளது.
BackCopyrights © 2026 . All rights reserved, Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.
